fbpx

அறிமுக போட்டியிலேயே அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால்!… 47 ஆண்டுகளுக்குபின் முதல் இந்திய வீரராக புதிய சாதனை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால், தான் களமிறங்கிய அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியதுடன், பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியானது டொமினிகாவில் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அற்புதமான பவுலிங்கால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து தடுமாறினர். இதனால், முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியில் விளையாடும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் அந்த அணி தொடக்கத்திலேயே தடுமாறி வந்தநிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50.3 ஓவர்களை எதிர்கொண்டு130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அபாரவெற்றி பெற்றது. டெஸ்டின் இரண்டாவது நாளில் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார் ஜெய்ஸ்வால். இந்த சாதனையை எட்டிய 17வது இந்திய டெஸ்ட் அறிமுக வீரர் என்ற பெருமை பெற்ற அவர், 215 பந்துகளில் 11 பவுண்டரிகள் அடித்து சதத்தை பதிவு செய்தார். அவருடன் சேர்ந்து அற்புதமான பார்ட்னர்ஷிப் போட்ட இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இவர்களது அபாரமான ஆட்டத்தால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில், அதிகபட்ச முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பை இந்திய அணி பதிவு செய்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 229 ரன்களை ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் இணை சேர்த்தது.

3வது நாளிலும் சிறப்பாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால், 171 ரன்களுக்கு அவுட்டானார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் 150 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை எட்டினார். இதற்கு முன் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்திருந்த ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய மண்ணில் தான் இந்த சாதனையை செய்திருந்தனர். இந்நிலையில் அறிமுக டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் யஷஸ்வி.

150 ரன்களை பதிவு செய்திருக்கும் ஜெய்ஸ்வால், குறைந்த வயதில் இதை பதிவு செய்த 5வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 21 வயது 196 நாட்களில் இந்த ரெக்கார்டை படைத்திருக்கும் ஜெய்ஸ்வால், 47 வருடங்களுக்கு பின் இப்படியொரு சாதனையை செய்திருக்கிறார். முன்னதாக பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியான்டத், 1976ஆம் ஆண்டு 19 வயது 119 நாட்களில் 150 ரன்கள் அடித்ததே குறைந்த வயதில் அடிக்கப்பட்ட அதிக ரன் சாதனையாக இருக்கிறது. அந்த பட்டியலில் 19 வயது 149 நாட்கள் (1929), 19 வயது 354 நாட்கள் (1965), 20 வயது 226 நாட்கள் (1930) என மற்ற வீரர்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

Kokila

Next Post

ஆசிய தடகள போட்டி!... இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்!... பதக்கப்பட்டியலில் 3-வது இடம்!

Sat Jul 15 , 2023
ஆசிய தடகள போட்டியில் குண்டு எறிதல் மற்றும் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள்சேஸ் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன. 24-ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் ஆசிய சாதனையாளரான இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் தனது 2-வது முயற்சியில் 20.23 மீட்டர் தூரம் எறிந்தார். அத்துடன் அவர் இடுப்பின் […]

You May Like