fbpx

NO கெமிக்கல்!! இனி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம், மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம்..

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்று ஜாம். 90’s கிட்ஸ் பொதுவாக கையில் 2 ரூபாய் ஜாம் பாக்கெட்டுடன் சுற்றுவது வழக்கம். அதனால் இன்று கையில் ஜாமை கொடுத்தாலும் மொத்தத்தையும் காலி செய்து விடுவார்கள். அத்தனை ருசியான ஜாமை சாப்பிட வேண்டும் என்ற ஆசை வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் இருக்கும். ஆனால் சில தாய்மார்கள் அதில் இருக்கும் அதிக சர்க்கரை, கெமிக்கல் ஆகியவை தங்களின் குழந்தைக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறிந்து, அவர்களுக்கு கொடுப்பதில்லை. நாம் கடையில் வாங்கும் ஜாமை குழந்தைகளுக்கு கொடுக்கவும் கூடாது. இதற்க்கு மாற்றாக, நாம் வீட்டில் இருக்கும் பழங்களை பயன்படுத்தி எந்த கலப்படமும் இல்லாத வீட்டிலேயே ஜாமை தயாரித்து விடலாம்.. சுவையான மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம் ரெசிபியை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

முதலில் 1/2 பப்பாளி, 1/2  அன்னாசி, 3 ஆப்பிள் பழங்களின் தோலை சீவி, ஒரே அளவிலான சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். 1/2 கிலோ திராட்சையில் இருக்கும் விதைகளை நீக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு வாணலி வைத்து, அதில் வெட்டி வைத்துள்ள ஆப்பிள், அன்னாசி மற்றும் பப்பாளியை சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து இறக்கி விடுங்கள்.. வேகவைத்த பழங்கள் நன்கு ஆறிய பிறகு, அதனுடன் விதை நீக்கிய திராட்சை, 1 1/2 ஸ்பூன் லெமன் ஜூஸ், 1 வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து விடுங்கள்..

இப்போது மற்றொரு வாணலி வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள பழங்களை சேர்த்து, அதனுடன் 1/2 கிலோ சர்க்கரை மற்றும் சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக மாறும் வரை அடுப்பின் தீயனை சிம்மில் வைத்து கொதிக்க விடுங்கள். கடைசியாக அதில் 6 ஸ்பூன் சிட்ரிக் ஆசிட் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது இதை, சற்று ஆறவைத்து, கண்ணாடி பாட்டிலில் அடைத்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.. இப்போது, மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம் ரெடி! இதனை பிரட், சப்பாத்தி போன்றவற்றில் வைத்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். 

Read more: சளி, இருமல் பாடாய் படுத்துகிறதா?? இனி ஆரோக்கியத்தை பாதிக்கும் கண்ட மாத்திரை வேண்டாம்.. வெற்றிலையை இப்படி சாப்பிடுங்கள்..

English Summary

jam without chemical can be prepared in home

Next Post

நோயாளிகள் அதிர்ச்சி... கொல்கத்தாவில் ஏராளமான போலி புற்றுநோய் மருந்துகள் பறிமுதல்...!

Wed Jan 1 , 2025
Large quantity of fake cancer drugs seized in Kolkata

You May Like