fbpx

‘ஏலியனை மெய்யாலுமே சந்தித்து ஹலோ சொல்லலாம்’ – பிரபஞ்சத்தில் ஏலியனை உறுதி செய்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!

பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்ட உயிர்க்கோளமான பூமிக்கு அப்பால், அதே போன்ற இன்னொரு கிரகத்தில் உயிர்களின் சாத்தியத்தை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி உறுதி செய்திருக்கிறது.

சமீபத்தில் அமெரிக்காவின் ராணுவம் ஏலியன்களை பற்றி வெளியிட்ட ஒரு பதிவில், ஏலியன்களின் இருப்பை உறுதி செய்வது போல தெரிவித்துள்ளது. அதன் பிறகு தான் மக்கள் மத்தியில் ஏலியன்கள் உண்மையாக இருக்குமோ? என்பது போன்ற கருத்துக்கள் அதிகம் பரவ ஆரம்பித்தன. இப்போது சுமார் 124 போன்ற கருத்துக்கள் அதிகம் பரவ ஆரம்பித்தன.இப்போது சுமார் 124 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றி வரும் k2-18b என்ற கிரகத்தை, உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளுடன் ஜேம்ஸ் வெப் விண்வெளி ஆய்வுக்கான தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இதுவரை ஏவப்பட்டதில் சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தந்திருக்கும் தரவுகள், விண்வெளி ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் தந்துள்ளன.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கிரகத்தின் இருப்பு உறுதி செய்யப்பட்டாலும், அண்மை ஆய்வுகள் அதில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகம் உறுதிசெய்து வருகின்றன. குறிப்பாக உயிர்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டைமெதில் சல்பைடு வாயு அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்ட ஆய்வுகள் மேற்படி கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு இருப்பை உறுதிப்படுத்த முயன்று வருகின்றன. அடுத்த 6 மாதங்களில் இதற்கான விடை கிடைத்துவிடும் என்றும் நாசா அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அங்கிருக்கும் ஏலியன்கள் அல்லது ஏதோவொரு உயிர்களை, மேலும் நெருக்கமாக ஆராய்வதற்கு பூமிக்கும் K2-18b கிரகத்துக்கும் இடையிலான தொலைவு பெருந்தடையாக உள்ளது. 124 ஒளியாண்டுகள் தொலைவு என்பது, K2-18b கிரகத்தை நோக்கி பயணம் மேற்கொள்வதில் மனிதனின் அற்பமான ஆயுளோடு ஒப்பிடுகையில் மிகப் பிரம்மாண்டமானது.

மணிக்கு 38,000 மைல் வேகத்தில் சீறும் வாயேஜர் விண்கலத்தில் ஏறி விரைந்தாலும் கூட, அந்த கிரகத்தை அடைய சுமார் 22 லட்சம் ஆண்டுகள் ஆகும். தலைசுற்றச் செய்யும் இந்த தொலைவுதான் K2-18b ஏலியனுக்கும் நமக்கும் இடையே பெரும் தடையாக இருக்கிறது. இதற்கு தீர்வு தரும் தொழில்நுட்பம் கண்டறியப்படும்போது K2-18b ஏலியனை மெய்யாலுமே சந்தித்து ஹலோ சொல்லலாம்.

Next Post

மக்களே 5 நாட்களுக்கு உஷாரா இருங்க..! - வெப்ப அலை தாக்க போகுதாம்..!

Sun Apr 28 , 2024
அடுத்த ஐந்து நாட்களுக்கு வட தமிழக உள்மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் […]

You May Like