ஜம்ம காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி மர்ம முறையில் கொலை செய்யப்பட்ட முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறைத்துறை டிஜிபியான ஹேமந்த் குமார் லோஹியா , ஜம்முவின் புறநகர் பகுதியில் உதய்வாலா பகுதியில் தான் தங்கியிருந்த வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
டி.ஜி.பி. இருந்த வீட்டில் வேலை செய்தவர் பற்றி விசாரணை நடத்தியபோது அவர் தலைமறைவாகிவிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அவர் குற்றவாளியாகவோ அல்லது குற்றத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர்மாநிலம் உதய்வாலா பகுதியில் 57 வயதான ஹேமந்த் குமார் லோஹியா . இவர் மாநில சிறைத்துறை டிஜிபியாக பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் வீட்டில் மர்மமான முறையில் இவர் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தார். தகவல் அறிந்த உள்ளூர் போலீசார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கொலை செய்யப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. ஹேமந்த் குமார் 1992ல் ஐ.பி.எஸ். கேடராக இருந்தவர். ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரது சொந்தவீடு பராமரிப்பு பணி நடந்து வருகின்றது. இதனால் நண்பர் ராஜீவ் கஜுரியா என்பவர் வீட்டில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.
கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் நடந்த இடத்தை முதலில் பரிசோதித்ததில் சந்தேகத்திற்குரிய கொலை வழக்கு என தெரியவந்துள்ளது. உடலில் தீக்காயங்களும் காணப்பட்டதாக டிஜிபி முகேஷ் சிங் கூறியுள்ளார். அத்துடன் வீட்டில் பணியாற்றி நபர் தலைமறைவாக இருப்பதால் இக்குற்றத்தில் தொடர்புடையதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகின்றது.