fbpx

JKNF அமைப்பிற்கு 5 ஆண்டு தடை…! மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி உத்தரவு…!

ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி என்ற இயக்கத்தை சட்ட விரோத இயக்கமாக அறிவித்து, 5 ஆண்டுகள் தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.

சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் நயீம் அகமது கான் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்பிற்கு மத்திய அரசு தடை விதித்தது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது உத்தரவில்; ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி என்ற இயக்கத்தை சட்ட விரோத இயக்கமாக அறிவித்து, 5 ஆண்டுகள் தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி “நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு பாதகமான சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருகிறது” என்று மத்திய அரசாங்கம் கூறியது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் பிரிவினைவாதத்தை தூண்டுவதற்கும், யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளுக்கு தளவாட ஆதரவை வழங்குவதற்கும், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை ஆதரிப்பதில் ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

எனவே, ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணி என்ற இயக்கத்தை சட்ட விரோத இயக்கமாக அறிவித்து, 5 ஆண்டுகள் தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

Tn Govt: வந்தாச்சு புதிய அறிவிப்பு..! புதிய ரேஷன் அட்டை வாங்க போகும் நபர்கள் இதை கவனிக்கவும்...!

Wed Mar 13 , 2024
புதிய குடும்ப அட்டைகளை வட்ட வழங்கல் அலுவலகங்களில் தாங்களோ தங்கள் குடும்ப உறுப்பினர் சென்று பெற்றுக்கொள்ளலாம். பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அரிசி உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை நியாயவிலைக் கடைகள் வாயிலாகப் பெற்று பயனுறும் வண்ணம் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 7.5.2021 முதல் 30.6.2023 வரை பதினைந்து இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பிலுள்ள குடும்ப அட்டைகள் அடிப்படையில் புதிய […]

You May Like