ஜனவரி 5 ஆம் தேதியை தனது மறுபிறப்பு என இன்ஸ்டா மற்றும் ட்விட்டரில் பயோவை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் மாற்றியுள்ளார்.
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர்ரான ரிஷப் பந்த், கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி பயங்கர கார் விபத்தில் சிக்கினார். விபத்தில் அவரது கார் தீப்பற்றி எரிந்த நிலையிலும் ரிஷப் பந்த் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். இதன்பின் ரிஷப் பந்த், மும்பையின் கோகிலாபென் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரிஷப் பந்த், தான் சிகிச்சை முடிந்து வெளிவந்த தேதியான ஜனவரி 5 ஆம் தேதியை தனது மறுபிறப்பு என சமூக வலைதளமான இன்ஸ்டா மற்றும் ட்விட்டரில் பயோவை(Bio) மாற்றம் செய்துள்ளார். விபத்துக்குப்பின் தற்போது அவர் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார், விரைவில் இந்திய அணிக்கு திரும்ப அவர் தீவிர பயிற்சி செய்து வருகிறார்.