இந்திய வேகப்பந்து வீச்சாளர் 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான மதிப்புமிக்க சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதை 2024 ஆம் ஆண்டு தனது சிறப்பான ஆட்டத்திற்காக வென்றுள்ளார். ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக பும்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்,
டிராவிஸ் ஹெட், ஹாரி ப்ரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் சவாலை முறியடித்து 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் கிரிக்கெட் வீரராக முடிசூடினார். அவர் கூறுகையில், “சர் கார்பீல்ட் சோபர்ஸ் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். கடந்த ஆண்டு, பார்படாஸில் நடந்த டி20 உலகக் கோப்பையை வென்றது உண்மையில் மறக்க முடியாதது. இது என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு நினைவகம், நான் அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன்” என்று பும்ரா கூறினார்.
டி20 உலகக் கோப்பையின் போது இந்திய அணியின் நட்சத்திரமாக இருந்ததால், வேகப்பந்து வீச்சாளர் 21 போட்டிகளில் 13.76 சராசரியில் 86 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஸ்பிரித் பும்ரா 2024ம் ஆண்டு மட்டும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14.92 என்ற சராசரியுடன் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 2024ல் மொத்தமாக 357 ஓவர்களை வீசியுள்ள பும்ரா ஓவருக்கு 2.96 ரன்கள் என்று மிகச்சிறந்த சிக்கன விகிதத்தை பெற்றுள்ளார். 30.1 ஸ்டிரைக் ரேட்டில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 2024 தொடக்கத்தில் கேப்டவுனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தமாக 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மொத்தமாக 32 விக்கெட்டுகளை அறுவடை செய்திருந்தார். ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் விருதை பெறும் முதல் இந்தியா வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
Read more : மகளின் உயிர் பிரிவதை, ஒன்றாக நின்று வேடிக்கை பார்த்த குடும்பம்.. நெஞ்சை பதற வைக்கும் ஓர் கொடூர சம்பவம்!!!