fbpx

ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு மனு..!

ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தன்னை அழைத்து திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில் வீடுகள் ஏற்படுத்தும்படி கூறியதாகவும், அதன் அடிப்படையில் வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுத்து, 125 வீடுகளுக்கு முன் பணமாக 30 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்ததாக கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு மனு..!

இந்த விவரங்கள் சசிகலாவுக்கும், ஜெயலலிதாவின் உதவியாளரான ரமேஷ் என்பவருக்கும் தெரியும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின், பெங்களூரு சென்ற வழியில் தன்னை சந்தித்த சசிகலா, சில சொத்துக்களை தனது பெயருக்கு ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாகக் கூறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா தற்போது தன்னை சந்திக்க மறுப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார். இந்த உயிலை வெளியிடக் கோரி பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஜெயலலிதாவின் சமாதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கோரி காவல்துறைக்கு மனு அளித்ததாகவும், அந்த மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு மனு..!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி மனுதாரர் விண்ணப்பித்துள்ளாரா? என்பதை அறிந்து தெரிவிக்கும்படி காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Chella

Next Post

டோல்கேட் கட்டணம் கட்ட முடியாது என்ன செய்வ?.... குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட பெண்கள்... வீடியோ வைரல்..!!

Mon Sep 19 , 2022
மாராட்டிய மாநிலம் நாசிக்கின் பிம்பால்கான் டோல் கேட்டில் ஒரு பெண் ஊழியர் சுங்க கட்டணம் வசூலிதத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ஒருவரின் மனைவி காரில் வந்துள்ளார். அவர் டோல் கேட் கட்டணம் செலுத்த முடியாது என கூறி இருக்கிறார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பறகு அது மோதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சன்டை […]

You May Like