fbpx

மீண்டும் இணையும் ஜெயம் ரவி – ஆர்த்தி ஜோடி..!! சென்னை குடும்ப நல நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

ஜெயம் ரவியும் – ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இருவரும் விவாகரத்து முடிவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின. இந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

நீண்ட கால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தங்களது திருமண பதிவை ரத்து செய்து மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி ஜெயம் ரவி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் விவாகரத்து கோரி ஜெயம் ரவி தொடர்ந்த மனு மீதான விசாரணை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. விசாரணைக்கு ஜெயம் ரவி நேரில் ஆஜரானார். ஆர்த்தி காணொலி காட்சி மூலம் ஆஜரானார். வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளது. இன்றே இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read More : புற்றுநோயை உண்டாக்கும் உப்பு..!! அதிகளவு சேர்த்துக் கொண்டால் ஆப்பு..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!

English Summary

Actor Jayam Ravi and his wife have been ordered to hold talks at the conciliation center.

Chella

Next Post

இந்த விஷயம் தெரிஞ்சா போதும்..! 8-4-3 ஃபார்முலா கேள்விபட்டிருக்கீங்களா? நீங்களும் கோடீஸ்வரன் தான்..!!

Fri Nov 15 , 2024
You can become a millionaire by following the 8-4-3 formula, it will take only this much time for your dreams to come true..

You May Like