fbpx

ஆர்த்தியுடன் பேசிய ஜெயம் ரவி..!! பதிலுக்கு அவர் சொன்ன அந்த வார்த்தை..!! வெச்சி செய்யும் நெட்டிசன்ஸ்..!!

நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து, இருவருக்கும் இடையேயான பிரச்சனை தொடர்பாக குடும்ப நல நீதிமன்றம் சமரச தீர்வு மையத்தின் மூலம் சந்தித்து பேச வேண்டும் என இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் அங்கு சென்று பேசிய பிறகு அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பாக விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தேன்மொழி உத்தரவிட்டிருந்தார்.

அப்போது நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியிடம் 10 நிமிடம் காணொளி காட்சியில் பேசியுள்ளார். ஆனால், அந்த சமயத்தில் ஆர்த்தி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதனால் சமரச பேச்சுவார்த்தை தள்ளி வைத்துக்கொள்ளலாம் என்று கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி மற்றும் விவாகரத்து வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சமரச தீர்வு மையம் உத்தரவு பிறப்பித்தது.

ஆர்த்தி வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாகவும், அவரை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும், ஆர்த்தி வேற ஏதோ பிளான் போட்டு வருவதால் தான் அதற்காக கால அவகாசம் தேவைப்படுவதால் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார் என்றெல்லாம் நெட்டிசன்ஸ் ஜெயம் ரவி மீது கருணை காட்டி ஆர்த்தியை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Read More : BREAKING | நடிகர் தனுஷ் பழிவாங்குகிறார்..!! நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு..!! சினிமா திரையுலகில் பெரும் பரபரப்பு..!!

English Summary

Actor Jayam Ravi spoke to his wife Aarti in a 10-minute video.

Chella

Next Post

உடைந்த சிலைகளை மரத்தின்கீழ் விட்டுச் செல்வது ஏன்?

Sat Nov 16 , 2024
Seeing broken idols and torn pictures of deities are found under trees all around the country with devotees stopping by to offer prayers and even make offerings.

You May Like