fbpx

பால் உற்பத்தியாளர்களுக்கு ஜெர்சி கலப்பின கறவை மாடுகள்..!! ஆவின் நிறுவனம் அதிரடி முடிவு..!!

தமிழ்நாட்டில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்துடன் சேர்ந்து ஆவின் பால் நிறுவனம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக 37.38 லட்சமாக இருந்த ஆவின் பால் கொள்முதல் தற்போது நாள்தோறும் 27 லட்சம் லிட்டராக குறைந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மீண்டும் ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க ஜெர்சி கலப்பின கறவை மாடுகளை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு வங்கி கடன் மூலம் வழங்க ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த ஒரு ஆண்டில் மட்டுமே இரண்டு லட்சம் கலப்பின கறவை மாடுகள் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 27 மாவட்ட ஒன்றியங்களில் 2 லட்சம் உற்பத்தியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வங்கி கடன் மூலம் ஜெர்சி கலப்பின கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் தமிழகத்திற்கு தற்போது ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஜெர்சி கலப்பின கறவை மாடுகள் வாங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

காவு வாங்கிய Kawasaki..!! 300 கிமீ வேகத்தில் அதிவேக பயணம்..!! பிரபல யூடியூபர் உயிரிழப்பு..!!

Sat May 6 , 2023
இருசக்கர வாகனத்தில் அதிவேக பயணத்தின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளங்களை கொண்டிருந்த பிரபல யூடியூபர் அகஸ்தய் சவுகான் விலை உயர்ந்த பைக்கில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முயன்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் அகஸ்தய் சவுகான் (25). இவர், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை பற்றி ரிவியூவ் செய்வதோடு, பைக்கில் அதிவேகத்தில் சென்று சாகசம் செய்யும் வீடியோக்களை ‘புரோ ரைடர் […]
காவு வாங்கிய Kawasaki..!! 300 கிமீ வேகத்தில் அதிவேக பயணம்..!! பிரபல யூடியூபர் உயிரிழப்பு..!!

You May Like