fbpx

நகைப்பிரியர்களே உடனே கிளம்புங்க..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமானவை. தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,760-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,845-க்கு விற்பனையானது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ரூ.53,600-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ.6,700-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.7,170ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,360-ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை 2.50 காசுகள் குறைந்து கிராம் வெள்ளி ரூ.86.50க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.86,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : கொளுத்தும் வெயில்..!! ஹீட் ஸ்ட்ரோக் வந்தால் உடனே இதை பண்ணுங்க..!! இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து..!!

Chella

Next Post

ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. பழிக்கு பழியாக அணுமின் நிலையத்துக்கு குறி?

Tue Apr 23 , 2024
300 ராக்கெட்டுகளை ஏவி ஈரான் வான்வழித் தாக்குல் நடத்தியதற்கு பழிக்கு பழியாக ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி போர் தொடங்கியது. இந்த போர் கடந்த 7 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஹமாஸ் ஆயுதப்படையினரை வேட்டையாடி […]

You May Like