திமுக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாக தமிழகத்தில் 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது தான்… அரசு எப்பொழுது நிறைவேற்றும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில், தற்பொழுது அதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்கள் நகை கடன், விவசாய கடன் குறித்து எழுதிய கேள்விக்கு பதில் அளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ; தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3 ஆயிரத்து 969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 14 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் சுமார் 1 லட்சம் பேர் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்து தற்போது வரை நகை கடனுக்கான உறுதிமொழி பத்திரம் கொடுக்காததால் அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்ய முடியாத நிலை உள்ளது. அவர்கள் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் தள்ளுபடி செய்யப்படும் என கூறியுள்ளார்.