ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கி இருக்கும் நிலையில், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக – காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. ஹரியானாவை பொருத்தவரை மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் ஜிந்து மாவட்டத்தில் உள்ள ஜூலானா தொகுதியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிட்டார். மல்யுத்த விராங்கனையும், ஜுலானா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான வினேஷ் போகத் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் வினேஷ் போகத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் இந்திய விமானப் படை கமாண்டரும் பாஜக வேட்பாளருமான யோகேஷ் குமார் தோல்வியை தழுவினார்.
அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, தனக்கு வெள்ளிப் பதக்கம் தர வேண்டி வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.இதையடுத்து நாடு திரும்பிய வினேஷ் போகத், ராகுல் காந்தியை சந்தித்து பரபரப்பு ஏற்படுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு ஹரியானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
Read more ; ஜம்மு – காஷ்மீரில் முன்னிலை வகிக்கும் இந்தியா கூட்டணி..!! இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!!