தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர், சில காரணங்களால் விவாகரத்து செய்தார்.
தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார், இவருக்கு தற்போது மார்க்கெட் அதிகரித்து கொண்டேபோகிறது. மேலும், இவர் புஷ்பா படத்தில் ஐட்டம் டான்சராக ஆடியது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குஷி படம் பெரிதளவு ஹிட் கொடுக்கவில்லை. இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் நடிகை சமந்தாவுக்கு மெசேஜ் செய்தது குறித்த ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை சமந்தா பகிர்ந்துள்ளார்.
அதில், “அவரது ஜிம் பயிற்சியாளர் 11 மணிக்கு ஷார்ப்பாக ஜிம்மில் இருக்க வேண்டும் என மெசேஜ் செய்ய, இன்று எனக்கு உடல் நலம் சரியாக இல்லை. இன்று ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் என சமந்தா மெசேஜ் போட்ட நிலையில், 11 மணி ஆகி விட்டது, நான் வந்துட்டேன்.. நீ எங்கே காணோம் என ஜிம் டிரெய்னர் லீவே கொடுக்காமல் டார்ச்சர் செய்வது குறித்த சாட்டிங்கை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார்”.