இந்தியாவில் தமிழ்நாடு உள்பட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மேலும் 41 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவைகள் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தனது ட்ரு 5ஜி (True 5G) சேவையை இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள 41 நகரங்களில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. ஜியோ தனது 5ஜி சேவையை 41 நகரங்களில் அறிமுகம் செய்வதன் மூலம் 406 நகரங்களுக்கு மேல் அதன் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கோவா, ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிஷா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 41 நகரங்களில் தொடங்கியுள்ளது என அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தின் காரைக்குடி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தேனி அல்லிநகரம், உதகமண்டலம், வாணியம்பாடியில் 5 ஜி சேவையை தொடங்கவுள்ளது.
மேலும், 1.4 பில்லியன் இந்தியர்களுக்கு டிஜிட்டல் இந்தியாவின் பார்வையை செயல்படுத்தவும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவை உலகளாவிய தலைமைத்துவமாக உயர்த்தவும் இந்திய டிஜிட்டல் சேவைகள் துறையில் ஜியோ மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ட்ரு 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நகரங்களில் உள்ள ஜியோ பயனர்களுக்கு, கூடுதல் கட்டணமின்றி 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை அனுபவிக்க ஜியோ வெல்கம் ஆஃபர் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜியோ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தேசம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்கள் ஜியோ ட்ரூ 5ஜியை விரைவாகப் பெறுவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் எங்கள் நெட்வொர்க்கின் மாற்றும் சக்தி பல டிஜிட்டல் டச் பாயிண்ட்கள் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். ஜியோ அதன் True-5G வரம்பை விரைவான வேகத்தில் விரிவுபடுத்துகிறது மற்றும் ஏற்கனவே இந்தியாவில் திட்டமிடப்பட்ட True-5G நெட்வொர்க்கின் பெரும்பகுதியை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.