fbpx

வேலையை காட்ட தொடங்கிய JN 1 கொரோனா..!! 3 பேர் மரணம்..!! பீதியில் பொதுமக்கள்..!!

உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவைத் தொடர்ந்து கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 125 ஆக உயர்ந்தது. முந்தைய நாள் கர்நாடகா கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 106 ஆக இருந்தது. கர்நாடகாவில் கொரோனா பாதித்த 125 பேரில் 34 பேருக்கு JN1 கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை மொத்தம் 4170 ஆக உள்ளது.

ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 125, கொரோனா பாதிப்பில் குணமடைந்தவர்கள் 30, கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 3, கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் மொத்த எண்ணிக்கை 436. கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 3,155 பரிசோதனைகள் நேற்று நடத்தப்பட்டன. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 125 பேரில் பெங்களூரில் மட்டும் 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மைசூரில் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தனர்.

Chella

Next Post

பிரபலங்களின் வீடுகளில் திருடி ஏழை மக்களுக்கு உதவி செய்த திருடன்..!! 3 மனைவிகள், காதலியுடன் உல்லாசம்..!!

Tue Dec 26 , 2023
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதி எம்பி, எம்எல்ஏ காலனி அருகே வசிப்பவர் அனுராக் ரெட்டி. தொழிலதிபரான இவரது வீட்டில் கடந்த 9ஆம் தேதி பணம், நகை கொள்ளை போனது. இதுகுறித்து போலீசில் அனுராக்ரெட்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் மர்மநபர் ஒருவரின் முகம் பதிவாகியிருந்தது. […]

You May Like