தமிழ்நாட்டில் டிசம்பர் 24ஆம் தேதி வரை 4 பேருக்கு ஜே.என். 1 கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிசம்பர் 24ஆம் தேதி வரை (நேற்று) நாடு முழுவதும் 63 பேருக்கு ஜே.என். 1 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கோவா மாநிலத்தில் 34, மகாராஷ்டிரா – 9, கர்நாடகா – 8, கேரளா – 6, தமிழ்நாடு – 4 தெலுங்கானா – 2 பேருக்கு ஜே.என் 1 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் ஜே.என் 1 வகை பாதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ முடிவு கிடைக்கவில்லை என சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வ முடிவு கிடைக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தற்போது 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாருக்கும் தீவிர பாதிப்பு இல்லை, லேசான அறிகுறிகளே உள்ளதால் பதற்றம் அடைய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.