fbpx

Job | 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்..!! ரூ.35,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு துறையில் வேலை..!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : தமிழ்நாடு வருவாய்த் துறை

பணி : கிராம உதவியாளர்

மொத்த காலியிடங்கள் : 2299

மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம் :

அரியலூர் – 21, சென்னை – 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் – 66, திண்டுக்கல் – 29, தருமபுரி – 39, தூத்துக்குடி – 77, தேனி-25, திருவண்ணாமலை – 103, ஈரோடு – 141, காஞ்சிபுரம் – 109, கரூர் – 27, கிருஷ்ணகிரி -33, மதுரை – 155, ராமநாதபுரம் – 29, ராணிபேட்டை 43, சேலம் – 105, மயிலாடுதுறை – 13, நாகப்பட்டினம் – 68, நாமக்கல் – 68, பெரம்பலூர் – 21, புதுக்கோட்டை – 27, சிவகங்கை – 46, தஞ்சாவூர் – 305, திருநெல்வேலி – 45, திருப்பூர் – 102, திருவாரூர் – 139, திருவள்ளூர் – 151, திருச்சி – 104, தென்காசி – 18, திருப்பத்தூர் -32, விருதுநகர் – 38, வேலூர் – 30, விழுப்புரம் – 31.

கல்வித்தகுதி : 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு : குறைந்தபட்சம் 21 – 32, 37-க்குள் இருக்க வேண்டும்.

பதவி உயர்வு : 10 ஆண்டுகளுக்கு பிறகு கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முன்னுரிமை : பெற்றோரை இழந்தோர், ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை, வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பிக்க வேண்டும்.

Read More : Voter ID | என்னது நாடு முழுவதும் ஒரே வாக்காளர் அட்டையா..? மாநில அரசின் அனுமதியே தேவையில்லையாம்..!!

Chella

Next Post

Samsung, Realme, OnePlus, Xiaomi மற்றும் Vivo ஃபோன்களுக்கு ஆபத்து..!! மத்திய அரசு விடுத்த முக்கிய எச்சரிக்கை..!!

Fri Mar 15 , 2024
தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில், பெரும்பாலான வேலைகளை பொதுமக்கள் செல்போன் மூலமே முடித்து விடுகின்றனர். குறிப்பாக, ஆன்லைன் பேமேண்ட், ஆன்லைன் ஷாப்பிங் என அனைத்துமே ஆன்லைன் மயமாகிவிட்டதால், ஆன்லைனில் சைபர் குற்றங்களும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சைபர் குற்றங்கள், சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சைபர் குற்றவாளிகள் ஆண்ட்ராய்டு பயனர்களின் முக்கியமான தகவல்களை […]

You May Like