fbpx

சென்னையில் வேலை!… மாதம் ரூ.20000 முதல் ரூ.67,000 வரை சம்பளம்!… அனைவருக்கும் வாய்ப்பு!

சென்னை அமைந்துள்ள தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. யார் வேண்டுமானாலும் விண்ணப்பிலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பூவி அறிவியல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் சென்னை பள்ளிக்கரணையில், தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள மொத்தம் 89 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் II பணிக்கு 4 பேர், ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் I பணிக்கு 25 பேர், ப்ராஜெக்ட் சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணிக்கு 30 பேர், ப்ராஜெக்ட் டெக்னீசியன் பணிக்கு 16 பேர், ப்ராஜெக்ட் ஜூனியர் அசிஸ்டென்ட்பணிக்கு 14 பேர் என மொத்தம் 89 பேர் தேர்வு செய்யப்படன உள்ளனர்.

இதற்கு பிஇ, பிடெக், எம்இ பிரிவில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், மரைன் என்ஜினீயரிங், ஓசன் என்ஜீனியரிங், சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்எஸ்சி அல்லது பிஎச்டியை மரைன் பயாலஜி, மரைன் சயின்ஸ்ட், ஜூவாலஜி, பாட்டனி, பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ், பிசிஏ, பிஎஸ்சி டிப்ளமோ எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிப்புகள் இல்லாவிட்டால் டிகிரி, 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் II பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் I பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள்ளும், பிற பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் II பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.67 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் I பணிக்கு மாதம் ரூ.56 ஆயிரம், ப்ராஜெக்ட் சயின்டிபிக் அசிஸ்டென்ட், ப்ராஜெக்ட் டெக்னீசியன், ப்ராஜெக்ட் ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும். இதுதவிர எச்ஆர்ஏ கிடைக்கும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் பிப்ரவரி 28 ம் தேதிக்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் www.niot.res.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இந்த பணிக்கான நேர்க்காணல் தனித்தனியாக நடைபெற உள்ளது. மார்ச் 9, 10, 13, 14, 14 16, 17 ஆகிய தேதிகளில் நேர்க்காணல் நடைபெற உள்ளது.

Kokila

Next Post

மக்களே கோடைக்காலம் தொடங்கியாச்சு?... அடிக்கும் வெயிலுக்கு சூட்டை தணிக்க இதுதான் பெஸ்ட்!... விவரம் உள்ளே!

Tue Feb 21 , 2023
கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் நமது உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள மோர் பெரிதும் உதவி செய்யும். அதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இன்னும் சில தினங்களில் கோடைக்காலம் தொடங்கவுள்ளதால், வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இயற்கையான பழச்சாறு வகைகள் மற்றும் குளிர்ச்சியான பானங்களை பருகவேண்டும். அதிகளவில் தண்ணீர் குடிக்கவேண்டும். அந்தவகையில், உடலுக்கு குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரும் மோரில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதையும், பல வகைகளில் மோரை எப்படி […]

You May Like