இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி என்று அழைக்கப்படும் இந்திய அஞ்சல் துறையில் காலியாகவுள்ள 51 Circle Based Executive பணிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : Circle Based Executive
காலியிடங்கள் : 51
கல்வித் தகுதி :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் :
இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000 முதல் சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
டிகிரி மதிப்பெண்கள்
நேர்காணல்
சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை :
https://ibpsonline.ibps.in/ippbcbejan25 என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
SC/ST/PWD – ரூ.150
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ. 750
கூடுதல் விவரங்கள் : https://www.ippbonline.com/documents/20133/133019/1740805290092.pdf
Read More : “குலதெய்வங்கள்” என்றால் என்ன..? இந்த வழிபாடு மட்டும் இல்லையென்றால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது..!!