இந்திய விமானப் படையில் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு திருமணமாகாத ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆட்சேர்ப்பு திட்டம் : Agniveer Vayu (Sports) Intake-2025
வயது வரம்பு : 2.1.2004 தேதிக்கும் 2.7.2007 இடைப்பட்ட தேதிகளில் பிறந்திருக்க வேண்டும்.
சம்பளம் : மாதம் ரூ.30,000 முதல் 40,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி : கணிதம் இயற்பியல் பாடங்களுடன் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்ல், எலக்ட்ரிக்ல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கணினி அறிவியல், இன்ஸ்ட்ருமென்டேசன் டெக்னாலஜி போன்ற பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விளையாட்டுத் தகுதி : Athletics, Lawn Tennis, Basketball, Boxing, Kabaddi, Handball, Squash, Volleyball, Cycling, Cricket, Football, Gymnastics, Hockey, Shooting, Wrestling, Water Polo, Swimming/Diving, Wushu, Weight Lifting, Cycle Polo போன்ற ஏதாவதொரு விளையாட்டுகளில் சீனியர், ஜூனியர் பிரிவில் சர்வதேச விளையாட்டு போட்டிகள் அல்லது பல்கலைக் கழக அளிவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பத்தாரரின் விளையாட்டுத் தகுதி அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டுத் திறனறியும் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு தேதி : 18.9.2024 முதல் 20.9.2024 வரை தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை : www.agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க 29.8.2024 கடைசி தேதியாகும்.
Read More : செப்.23ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு..!! எங்கு தெரியுமா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!