இந்திய விமானப்படையில் (IAF) வேலைவாய்ப்பு பெற சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. விமானப்படை பொது நுழைவுத் தேர்வு மூலம் நீங்கள் படையில் சேரலாம். இந்தப் பணியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான afcat.cdac.in மூலம் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
01 ஜனவரி 2025 தேதியின்படி வயது 20 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். கிரவுண்ட் டூட்டி (தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத) கிளை: 01 ஜனவரி 2025 தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும். என்சிசி சிறப்பு நுழைவுக்கு பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
சம்பளம்
விண்ணப்பதாரர்களுக்கு மெட்ரிக் நிலை 10ன் கீழ் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி…?
* afcat.cdac.in இல் IAF AFCAT ஐக் கிளிக் செய்ய வேண்டும்.
* முகப்புப் பக்கத்தில் உள்ள AFCAT 01/2024 விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
* பதிவு செய்து விண்ணப்பத்துடன் தொடரவும்.
* விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.
* படிவத்தை சமர்ப்பித்து, எதிர்கால குறிப்புக்காக ஒரு பிரிண்ட்அவுட் எடுத்துக் கொள்ளவும்.