கேரளாவில் உள்ள Indian Naval Academy-இல் காலியாக உள்ள 242 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எஸ்எஸ்சி (Short Service Commission) வெளியிட்டுள்ளது.
பணியின் விவரங்கள் :
பணியின் பெயர் | பணியிடங்கள் | பிறந்த வருடம் |
General Service | 50 | 02 Jan 1999 to 01 Jul 2004 |
Air Traffic Controller | 10 | 02 Jan 1999 to 01 Jan 2003 |
Naval Air Operations Officer | 20 | 02 Jan 2000 to 01 Jan 2005 |
Pilot | 25 | 02 Jan 2000 to 01 Jan 2005 |
Logistics | 30 | 02 Jan 1999 to 01 Jul 2004 |
Naval Armament Inspectorate Cadre | 15 | 02 Jan 1999 to 01 Jul 2004 |
Education | 12 | 02 Jan 1999 to 01 Jan 2003 |
Engineering Branch | 20 | 02 Jan 1999 to 01 Jul 2004 |
Electrical Branch | 60 | 02 Jan 1999 to 01 Jul 2004 |
கல்வித்தகுதி :
BE/B.Tech பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். கல்விப்பிரிவு பணியிடங்களுக்கு அந்தந்த பிரிவுகளுக்கு ஏற்ற பாடப்பிரிவில் 60% மதிப்பெண்களுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : முதற்கட்டமாக ரூ.56,100 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை 3 பகுதிகளாக நடைபெறும். முதலில் விண்ணப்பதார்களின் படிப்பை பொறுத்து தேர்வு செய்யப்படுவர். அடுத்த்டு நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும்.
10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் :
எஸ்எஸ்சி மூலம் பணி அமர்த்தப்படுபவர்கள் 10 ஆண்டுகள் காலங்கள் பணியாற்ற வேண்டும். பணி திறமையைப் பொறுத்து 4 ஆண்டுகள் நீட்டிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
https://www.joinindiannavy.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 14/05/2023