தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், சமூக நல அலுவலர் மற்றும் சுருக்கெழுத்தர் பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடங்கள்: 2,674 சமூக நல அலுவலர் பதவி (Social Security Assistant), 185 சுருக்கெழுத்தர் பணி (stenographer-Group C)
கல்வித் தகுதி: சமூக நல அலுவலர் பதவிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்தர் பதவிக்கு பிளஸ்2 முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 2023, ஏப்ரல் 26 அன்று, விண்ணப்பதாரர் வயது வரம்பு 18- 27க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை: சமூக நல அலுவலர் பதவிக்கு எழுத்துத் தேர்வு, கணினி திறனறிவு தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். இதேபோல், சுருக்கெழுத்தர் பதவிக்கு எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்தர் திறன் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.04.2023
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி? recruitment.nta.nic.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.