மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
MKU வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. M.Sc. தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். NET/ GATE அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து rajashabala@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அதிகாரப்பூர்வ முகவரிக்கு 30.04.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.