fbpx

தமிழ்நாடு அஞ்சல்துறையில் வேலை..!! சம்பளம் ரூ.63,000 வரை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

தமிழ்நாடு அஞ்சல்துறையில் காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அஞ்சல் ஊர்தி சேவை மூத்த மேலாளர் அலுவலம் வெளியிட்டுள்ளது.

பதவிகார் ஓட்டுநர்
general central service, Group- C, Non-Gazetted, Non Ministerial posts
காலியிடங்கள் 58
கல்வித் தகுதி10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்இலகு ரக மற்றும் கனரக வாகனம் (Light & heavy motor vehicle) ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.

3 ஆண்டுகளுக்கு குறையாமல் கனரக வாகனங்களை ஓட்டியமைக்கான அனுபவம் இருக்க வேண்டும்.

மோட்டார் பணி (Motor Mechanism) குறித்து அறிவு இருக்க வேண்டும்.
வயது வரம்புவயது வரம்பு 18 -27க்குள் இருக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 ஆண்டுகள் வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு (Theory Test) செய்முறைத் தேர்வில் (Practical Test) பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பப் படிவத்தை, தமிழ்நாடு அஞ்சல் துறை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதிச் சான்றிதழ் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.03.2023.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, Chennai – 600 006

Chella

Next Post

தமிழ்நாட்டில் தீயாய் பரவும் வைரஸ்..!! முன்கூட்டியே முழு ஆண்டுத் தேர்வா..? மாணவர்கள் ஷாக்..!!

Thu Mar 16 , 2023
நாடு முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், பள்ளி இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு இல்லை என […]

You May Like