இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடு பிரிவில் (Air Traffic Control) 309 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : இந்திய விமான நிலைய ஆணையம்
பதவியின் பெயர் : ஜூனியர் நிர்வாகி (Air Traffic Control)
காலிப்பணியிடங்கள் : 309
கல்வித் தகுதி :
இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்கள் கொண்டு இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் படிப்பை முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC-க்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் :
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* கணினி வழி தேர்வு
* சான்றிதழ் சரிபார்ப்பு
* Voice Test
* Psychoactive Substances Test
* Psychological Assessment
* Physical Medical Examination
* Background Verification
விண்ணப்பிப்பது எப்படி..?
https://www.aai.aero/en/careers/recruitment என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.04.2025