fbpx

“இளங்கலை பட்டதாரிகளுக்கு கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு” – ரூ.29,200 முதல் ரூ.92,300 வரை சம்பளம்.! உடனடியாக விண்ணப்பிக்கவும்.!

புதுச்சேரி மாநில கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை கூட்டுறவுத்துறை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி புதுச்சேரி கூட்டுறவுத் துறையில் ஜூனியர் இன்ஸ்பெக்டர் வேலைக்கான 38 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பி.காம் அல்லது பி.ஏ. (கூட்டுறவு) அல்லது பி.பி.ஏ. அல்லது பி.சி.எம். (கூட்டுறவு மேலாண்மை இளங்கலை) அல்லது பி.பி.எம் ( வங்கி மேலாண்மை) அல்லது பி.சி.எஸ் (இளங்கலை நிறுவன செயலாளர்) அல்லது சி.ஏ. (இன்டர்) அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ. (இன்டர்) அல்லது ஏ.சி.எஸ் (இன்டர்) ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் கூட்டுறவு மேலாண்மை துறையில் டிப்ளமோ அல்லது முதுகலை டிப்ளமோ பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 வருடங்களும் ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும் பொதுப்பணித்துறையில் பணியாற்றியவர்களுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் எதுவும் இல்லை. விண்ணப்பித்த நபர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள். ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக Rs. 29,200/- முதல் Rs. 92,300/- வரை வழங்கப்படும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் 02.02.2024 தேதிக்கு முன்பாக கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற விவரங்களை https://cooperative.py.gov.in/recruitment-post-junior-inspector-coop-societies இணைய முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Post

இரவு உணவை, இப்படி சாப்பிடுங்கள்.. உடலில் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்.!

Fri Jan 12 , 2024
அன்றாடம் ஒருவர் இரவு உணவை 07:00 முதல் 07: 30 மணிக்குள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அன்றைய தினம் முழுவதும் சோர்வாக இருக்கும் நீங்கள் சரியான நேரத்தில் உணவை சாப்பிடும் பட்சத்தில் தூங்குவதற்கு தேவையான அளவிற்கு நேரம் கிடைக்கும். எனவே அதிகாலையில் எழும்போது சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். மேலும், மன அழுத்தத்தை போக்குகின்ற மெலடோனின் என்கின்ற ஹார்மோன் சுரப்பது குறைந்து, ஆற்றல் அதிகரிக்கும். […]

You May Like