இந்தியாவில் முன்னணி கல்வி நிறுவனங்களாக ஐஐடி செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையிலும் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான், சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலியிடங்கள் : சென்னை ஐஐடியில் சூப்பிரண்டிங் என்ஜினீயர் (குரூப் ஏ) பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஜூனியர் டெக்னீசியன் (குரூப் சி) பணிக்கு 40 பேரும், ஜூனியர் டெக்னீசியன் பணியை பொறுத்தமட்டில் பிரிவு வாியாக சிவில் – 3, கெமிஸ்ட்ரி – 3, கம்பயூட்டர் சயின்ஸ் – 1, மெக்கானிக்கல் – 11, இசிஇ – 2 இ அண்ட் ஐ (E & I) – 12, இஇ (EE) – 2 பேர், பயோலஜி/லைப் சயின்ஸ் – 1, பயோ டெக்னாலஜி – 1, பயோ மெடிக்கல் – 1, விலங்கியல் – 1 என மொத்தம் 40 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி தகுதி : சூப்பிரண்டிங் என்ஜினீயர் பணிக்கு எம்இ, எம்டெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது சிஜிபிஏ (CGPA) உடன் குரூப் ஏ பிரிவில் 8 ஆண்டு அனுபவத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் எக்ஸிக்யூட்டிவ் என்ஜினீயர் பணி செய்திருக்க வேண்டும். அல்லது பிஇ, பிடெக் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது சிஜிபிஏ உடன் குரூப் ஏ பிரிவில் 10 ஆண்டு அனுபவத்தில் குறைந்தப்பட்சம் 3 ஆண்டு எக்ஸிக்யூட்டிவ் என்ஜினீயர் பணி செய்திருக்க வேண்டும். ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளேமா என்ஜினீயரிங் அல்லது பிஎஸ்சி பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : சூப்பிரண்டிங் என்ஜினீயரிங் பணிக்கு 50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயதுக்குள், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், பிடபிள்யூபிடி பிரிவினர் என்றால் 10 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம் : சூப்பிரண்டிங் என்ஜினீயர் பணிக்கு மாதம் ரூ.78,800 முதல் ரூ.2.09 லட்சம் வரை (லெவல் – 12) சம்பளம் வழங்கப்பட உள்ளது. ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.19,900 முதல் ரூ.63,200 (லெவல் 2) வரை சம்பளம் என்பது வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? : தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 2ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் https://recruit.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி, பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி/ட்ரேட் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Read More : Lok Sabha | அதிமுகவை அதிரவைத்த தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள்..!! ஒருவேளை இப்படித்தான் நடக்குமோ..?