fbpx

#Job Alert..!! தமிழக ரேஷன் கடைகளில் மெகா காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இன்று (14.11.2022) விண்ணப்ப செயல்முறை முடிவடைவதால், விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

#Job Alert..!! தமிழக ரேஷன் கடைகளில் மெகா காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

பணியின் முழு விவரங்கள்…

பதவி மற்றும் கல்வித் தகுதி:

  • விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள்.
  • விற்பனையாளர்கள் பதவிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10ஆம் வகுப்புத் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள்: 6503

மாவட்டம் வாரியாக காலியிடங்கள் விவரம்:

மாவட்டம்காலியிடங்கள்விண்ணப்பிக்கும் இணையதளம்
1கோயம்புத்தூர்233https://www.drbcbe.in/
2விழுப்புரம்244https://www.drbvpm.in/
3விருதுநகர்164https://www.vnrdrb.net/
4புதுக்கோட்டை135https://www.drbpdk.in/
5நாமக்கல்200https://www.drbnamakkal.net/
6செங்கல்பட்டு178https://www.drbcgl.in/
7ஈரோடு243https://www.drberd.in/
8திருச்சி231https://www.drbtry.in/
9மதுரை164https://drbmadurai.net/
10ராணிப்பேட்டை118https://www.drbrpt.in/
11திருவண்ணாமலை376https://drbtvmalai.net/
12அரியலூர்75https://www.drbariyalur.net/
13தென்காசி83https://drbtsi.in/
14திருநெல்வேலி98https://www.drbtny.in/
15சேலம்276https://www.drbslm.in/
16கரூர்90https://drbkarur.net/
17தேனி85https://drbtheni.net/
18சிவகங்கை103https://www.drbsvg.net/
19தஞ்சாவூர்200https://www.drbtnj.in/
20ராமநாதபுரம்114https://www.drbramnad.net/
21பெரம்பலூர்58https://www.drbpblr.net/
22கன்னியாகுமரி134https://www.drbkka.in/
23திருவாரூர்182https://www.drbtvr.in/
24வேலூர்168https://drbvellore.net/
25மயிலாடுதுறை150https://www.drbmyt.in/
26கள்ளக்குறிச்சி116https://www.drbkak.in/
27திருப்பூர்240https://www.drbtiruppur.net/
28காஞ்சிபுரம்274https://www.drbkpm.in/
29கிருஷ்ணகிரி146https://drbkrishnagiri.net/
30சென்னை344https://www.drbchn.in/
31திருப்பத்தூர்75https://drbtpt.in/
32திண்டுக்கல்310https://www.drbdindigul.net/
33நாகை98https://www.drbngt.in/
34திருவள்ளூர்237https://www.drbtvl.in/
35தூத்துக்கடி141https://www.drbtut.in/
36நீலகிரி76https://www.drbngl.in/
37கடலூர்245https://www.drbcud.in/
38தருமபுரி98https://www.drbdharmapuri.net/

அந்தந்த மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட இணைய பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.drbobo.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபால் மூலமாகவே பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் கீழ்க்கண்டவற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரரின் புகைப்படம் -50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format).

விண்ணப்பதாரரின் கையெழுத்து – 50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format)

விண்ணப்பதாரரின் சாதிச் சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல்(pdf file)

குடும்ப அட்டை – 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) (அல்லது)

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை – (pdf file)

SBI Collect” என்ற சேவையைப் பயன்படுத்தி Online மூலம் செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டண ரசீது செலுத்தியிருப்பின் அந்த ரசீது (pdf file)

(அல்லது)

மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேரடியாக செலுத்தியிருப்பின் (DRB Copy of the pay-in-slip) பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் – 100 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) 10.

ஏற்கனவே 2020ஆம் ஆண்டு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்தமுறை விண்ணப்பிக்கும் போது கடந்த முறை அளித்த விண்ணப்ப நகல் / வங்கி செலான் / நேர்முகத் தேர்வுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்று 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

முன்னுரிமை கோரும் இனத்திற்கான/ இனங்களுக்கான சான்றிதழ் – 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

விண்ணப்பக் கட்டணம்:

விற்பனையாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.150/- மற்றும் கட்டுநர் (Packers) விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- ஆகும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகளும் உரிய அலுவலரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.

Chella

Next Post

BOB வங்கியில் வேலைவாய்ப்பு…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Mon Nov 14 , 2022
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisor பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு Computer Science, IT பாடப்பிரிவில் MBA ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 5 ஆண்டுகள் இருக்க […]
அரசுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

You May Like