fbpx

மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்.. ஜெர்மன் நாட்டில் செவிலியர்களுக்கு வேலை..!! விண்ணப்பிக்க ரெடியா..?

ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிய செலிவியர் தேவைப்படுகிறார்கள். தமிழக அரசு அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் தகுதியுள்ளவர்கள் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு 6 மாதம் பணி  அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குட்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். அதன்படி இவர்களுக்கு B1,B2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத சம்பளமாக சுமார் ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளை நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2025க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in  மற்றும் 044- 22505886/  63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் : அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறுவனமாக தொடங்கப்பட்டு வெளிநாட்டு வேலைநாடுநர்களை வெளிநாடுகளி பணியமர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்திய கம்பெனிகள் சட்டம், 1956-ன்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்திய குடிபெயர்வோர் சட்டம் 1983-ன் கீழ் ஆட்சேர்ப்பு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டு வேலைகளில் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உரிமம் பெற்றுள்ளது.

Read more:இந்த உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைக்கவே கூடாது..!! – நிபுணர்கள் எச்சரிக்கை

English Summary

Jobs for nurses in Germany; Salary of Rs.2 lakhs

Next Post

OMG | உடலுறவு தொடர்பான கேள்விகள், நிர்வாண புகைப்படங்கள்..!! ஏஐ தொழில்நுட்பம் மூலம் பதிலளிக்கும் பிரபலங்கள்..!!

Thu Mar 6 , 2025
A popular AI company has created a new chatbot that uses celebrity images to answer sex-related questions.

You May Like