சைக்கிள் ஓட்டத்தெரிந்தால் போதும் மாதம் 50000 ரூபாய் சம்பளத்தில் தமிழக அரசு வேலை உங்களுக்காக காத்திருக்கு…
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அரசுப் பணிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. வருகின்ற 14.10.22 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
நிறுவனம் – திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி
பணியின் பெயர் –அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் – 4
விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.10.2022
விண்ணப்பிக்கும் முறை – ஆப்லைன்.
கல்வித்தகுதி – அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கண்டிப்பாக சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு – 1.7.22 அன்று , 42 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.
ஊதியம் – அலுவலக உதவியாளர் – ரூ.15,700 முதல் ரூ.50,000
விண்ணப்பிக்கும் முறை –ஆர்வமுள்ளவர்கள் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்படிவத்துடன் சுயசான்று கையொப்பத்துடன் ஆவணங்கள் நகல் எடுத்து 14.10.2022 க்குள் அனுப்ப வேண்டும்.