டி20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் யூசூஃப் பதானை ஜான்சன் தாக்க முயன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தலத்தில் வைரலாகி வருகின்றது.
லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் போட்டி ஜோத்பூரில் நடைபெற்றது. இத்தொடரில் பில்வாரா கிங்ஸ் , இந்தியா கேபிடல்ஸ் இடையே தகுதித் தேர்வு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது யூசூஃப் பதானுக்கும் மிட்சல் ஜான்சனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் கடுஞ் சொற்களால் சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றியபோது ஜான்சன் யூசூஃப்பை தள்ளினார்.இருவரும் கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்றனர். அதற்கு முன்பாக நடுவர்கள் தலையிட்டு விலக்கி வைத்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது.