சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்படும் இந்த சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் நிலவரம் பல விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
‘ஜெயிலர்’ பட வெளியீட்டுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் படத்தின் வெற்றிக் கொண்டாட்டம், பெங்களூருவில் தான் பணி செய்த இடத்துக்கு விசிட், சொந்த கிராமத்திற்கு சென்று திரும்பியது என பிஸியாக இருக்கிறார். ’தலைவர் 170’ படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ரஜினிகாந்த்-ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
மேலும், அதிமுகவை கைப்பற்ற நடத்திய சட்ட போராட்டத்தில் தொடர் தோல்வியை ஓபிஎஸ் சந்தித்த நிலையில், தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் உடனான ஓ.பன்னீர்செல்வத்தின் சந்திப்பு முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.