fbpx

Jothi Nirmalasamy | மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்..!! தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலை ஒட்டி தேர்தல் பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக இருந்த பழனிகுமார், கடந்த மார்ச் 9ஆம் தேதி, வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமியைத் தேர்வு செய்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு அனுப்பியிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வரின் ஒப்புதலை அடுத்து, மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார் ஜோதி நிர்மலாசாமி. அவர் இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More : தாய்மார்களுக்கு ரூ.1,000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா..? சர்ச்சையை கிளப்பிய குஷ்பு..!!

Chella

Next Post

ஆபாச படம் பார்ப்பது குற்றம் இல்லையா?… இது போன்ற கருத்தை ஒரு நீதிபது கூறுவது கொடுமை!… Supreme Court கண்டனம்!

Tue Mar 12 , 2024
Supreme Court: ஆபாச அபடங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல என சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறி இருந்த நிலையில், இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த இளைஞர் மீது அம்பத்தூர் காவல்துறையினர் போக்சோ வழக்குப்பதிவு செய்திருந்தனர். தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அந்த இளைஞர் […]

You May Like