சென்னை நீலாங்கரையில் இன்று வாக்களித்துவிட்டு வெளியே வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேச மறுத்தார். ஆனால், சீமானை விடாமல் பின்தொடர்ந்த பெண் பத்திரிகையாளரால் கடைசியில் ட்விஸ்ட் ஏற்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, தற்போது வரை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி கயல்விழியுடன் வந்து வாக்களித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். முதலில் அவர் தமிழில் பேட்டியளித்தார். அதன்பிறகு அவர் புறப்பட தயாரானார். இந்த வேளையில் ஆங்கில செய்தி நிறுவனத்தின் பெண் பத்திரிகையாளர் ஒருவர் சீமானிடம், ”சார் இங்கிலிஷ்” என கூறினார். அதற்கு சீமான் முடியாது என தனது தலையை அசைத்தார். இதையடுத்து உடனடியாக அந்த பத்திரிகையாளர், ”ஹிந்தி” என்றார். அதற்கு சிரித்தபடி சீமான், ”நோ” எனக்கூறி கிளம்பினார்.
ஆனால், அந்த பெண் பத்திரிகையாளர் சீமானை விடாமல், ”சார் ஒரு வரியிலாவது சொல்லுங்கள் சார்” என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து சீமான், அருகே இருந்த தனது மனைவி கயல்விழியை நோக்கி, ”அம்மா.. கொஞ்சம் சொல்லுமா” என்றார். ஆனால் அவரும் தயங்கினார். இதையடுத்து வேறு வழியின்றி சீமானே பதிலளிக்க தயாரானார். அப்போது பெண் பத்திரிகையாளர், ”இன்று நீங்கள் ஓட்டளித்து உள்ளீர்கள். நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?. மக்களுக்கு என்ன மெசேஜ் சொல்ல விரும்புகிறீர்கள்?” என கேள்வி கேட்டார்.
அதற்கு சீமான், ”நாங்கள் ஒரு பெரிய மற்றும் முழுமையான மாறுதலை எதிர்பார்க்கிறோம். அடிப்படை மாற்றத்தை விரும்புகிறோம். அது நடக்கும் என்று நினைக்கிறேன். என் மக்கள் பேரார்வமாக வந்து வாக்கு செலுத்துவதை பார்க்க முடிகிறது. அப்படியென்றால், ஒரு மாறுதலுக்கான சிந்தனை, எண்ணம் இருப்பதை நான் நம்புகிறேன். உறுதியாக மாறும்” என்றார்.
Read More : பயணிகள் செம குஷி..!! நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறது..!! ரயில்வேயில் வரும் புதிய மாற்றம்..!!