செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வரும் நிலையில், பவுன்சர்கள் தாக்கியதில் பத்திரிகையாளர் இளங்கோவன் நிலைகுலைந்துபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக விழாவில் அக்கட்சியின் பவுன்சர்கள் – பத்திரிகையாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, பவுன்சர்கள் தாக்கியதில் பத்திரிகையாளர் இளங்கோவனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தவெக ஆண்டு விழா அரங்கிற்குள் செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, பத்திரிகையாளர்களை பவுன்சர்கள் ஒருமையில் பேசியதாகவும், தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வீடியோவை காண : https://twitter.com/i/status/1894617880760914218
கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்
முன்னதாக, மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக #GetOut என வைக்கப்பட்ட பேனரில் தவெக தலைவர் விஜய் முதல் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரும் பேனரில் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் #GetOut கையெழுத்து இயக்கத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்துவிட்டார். ஜன் சுராஜ் என்ற கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோர், விஜய் கட்சியில் தேர்தல் ஆலோசகராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : ’நான் போட மாட்டேன்’..!! #GetOut பேனரில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்..!! அதிர்ச்சியில் விஜய்..!!