fbpx

’ஜோவிகாவுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சு’..!! ’அவ வெளிய வரப்போறா’..!! வனிதா விஜயகுமார் பரபரப்பு தகவல்..!!

நடிகை வனிதா விஜயகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்கச் சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர், ரெட் கார்டு கொடுக்குறீங்களா? என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அத்தோடு அந்த நபரின் சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாக கூறி, தாக்கப்பட்ட போட்டோவை பதிவிட்டு இருந்தார். இதனால் வனிதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இருப்பினும் சிலர் வனிதா இதுபற்றி போலீசில் புகார் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம் என்ன என்றும் வினாவி வருகின்றனர்.

இந்நிலையில், வனிதா ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் தன்னுடைய மகளான ஜோவிகாவுக்கு எனக்கு ஏதோ ஆச்சு என்று தெரிஞ்சிடுச்சு போல, அதான் அவ வீட்டுக்குள்ள சோகமாக இருக்கிறா, என்னை யாரோ அடிச்சிட்டாங்க என்ற உண்மை மட்டும் அவளுக்கு தெரிஞ்சிருந்தால் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்திருப்பார்.

அம்மா, பிள்ளை பாசம் என்றால் இது தான் போல, அத்தோடு மறைந்து நின்று தாக்கியதால், யார் அடித்தது என்று என்றால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

உலகையே உலுக்கிய பயங்கர சம்பவம்.! ஆடம்பர வாழ்க்கைக்காக 3 குழந்தைகளின் பிணங்களுடன் வாழ்ந்த தாய்.!

Wed Nov 29 , 2023
ரஷ்யாவை சேர்ந்த தாய் தனது மூன்று குழந்தைகளின் பிணங்களுடன் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தாயிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அவர் கூறிய வாக்குமூலம் காவல்துறையையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ரஷ்யாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பில் குழந்தைகளின் பிணங்களுடன் பெண் ஒருவர் வசித்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த குடியிருப்பிற்கு சென்று […]

You May Like