fbpx

‘ஜட்ஜ் ஐயா வேற இப்படி சொல்லிட்டாரு’..! ‘எங்கபோய் தேடுறது’..! நித்தியை கைது செய்வதில் நீடிக்கும் குழப்பம்..!

பாலியல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வரும் நித்யானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில், தன்னை சாமியாராக அவதானித்துக் கொள்ளும் நித்யானந்தாவுக்குச் சொந்தமான ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் சிஷ்யை ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் பிடதி போலீஸ் நிலையத்தில் நித்யானந்தா மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாலியல் வழக்கில் நித்தியானந்தா ஆஜராக நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

நித்தியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு..! ’எங்குபோய் தேடுவது என போலீசார் குழப்பம்’..!

இந்த பாலியல் தொல்லை வழக்கு வியாழக்கிழமை ராமநகர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார். இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும் நித்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இருக்கிறதா? இல்லையா? எங்கிருக்கின்றது? என்பதே தெரியாத கைலாசா தேசத்தில் பதுங்கி இருக்கும் நித்தியை எப்படி கைது செய்வது என தெரியாமல் போலீசார் விழிபிதுங்கி உள்ளனர். முதற்கட்டமாக பிடதி ஆசிரமத்தின் நிர்வாகம் வழியாக நித்திக்கு பிடிவாரண்ட் உத்தரவு நகலை போலீசார் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Chella

Next Post

2ஆம் வகுப்பு மாணவனை தலையில் அடித்த ஆசிரியர்..! மருத்துவமனையில் சிகிச்சை..! போலீசில் புகார்..!

Fri Aug 19 , 2022
தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவனுக்கு தலையில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால், அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு ஒன்றியற்குட்பட்ட வீர கோவிலில் சென் ஜோசப் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், வேணுகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் – சாந்தி தம்பதியரின் மகன் கிஷோர் […]

You May Like