fbpx

பூமிக்கு மிக அருகில் வரும் வியாழன்; 59 வருடங்களுக்குப் பிறகு நிகழும் அரிய நிகழ்வு..!!

சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழன் வரும் திங்கள் கிழமை பூமிக்கு அருகே வருகிறது. இது ஒரு அரிய நிகழ்வாகும்.

நமது சூரியக்குடும்பத்தில் ஐந்தாவது கோளாக இருப்பது வியாழன். இது தான் சூரியக்குடும்பத்திலேயே மிகப்பெரிய கோளாகும். நமது பூமியை போல 1,300 பூமியை வியாழனில் அடக்கிவிடலாம். வியாழன் கோளை 75-க்கும் மேற்பட்ட துணைக்கோள்கள் சுற்றிவருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த பிரம்மாண்ட வியாழன் கோள் தான் நாளை மறுநாள் பூமிக்கு அருகில் வர இருக்கிறது என நாசா தெரிவித்துள்ளது. திங்கள் கிழமை அன்று சூரியன் மேற்திசையில் மறையும் போது வியாழன் கோள் கீழ் திசையில் தெரியும். இதற்கு முன்னதாக கடந்த 1963 ஆம் வருடம் இதுபோன்ற நிகழ்வு வானில் நிகழ்ந்திருக்கிறது.

அப்போது வியாழன் வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது 59 வருடங்கள் கழித்து நடைபெறும் இந்த நிகழ்வை தொலைநோக்கி மூலம் காணலாம். அப்போது வியாழனை சுற்றிவரும் நான்கு துணைக்கோள்களையும் காணலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Rupa

Next Post

மிரட்டும் மர்ம காய்ச்சல்; 2 வயது குழந்தை பலி… நெல்லையில் நடந்த சோகம்…!

Sat Sep 24 , 2022
தமிழகத்தில் புளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1.என்1. இன்புளூயன்சா காய்ச்சல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரக்கூடிய மக்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஏராளமான குழந்தைகள் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கபட்டு உள்ளனர். நெல்லை மாவட்டம் பத்தமடையில் மர்ம காய்ச்சலால் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தமடை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்துவின் […]

You May Like