ஆடம்பரமான வீட்டைக் கட்டுவதற்காக கண்மூடித்தனமாக பணம் சம்பாதிப்பதில் மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மும்முரமாக செலவிடுகிறார்கள். அதே நேரம் மலிவான இடத்தைக் கூட பிரமிக்க வைக்கும் அளவுக்கு சிறந்த படைப்பாற்றல் கொண்ட சிலர் இருக்கிறார்கள். வெறும் 105 ரூபாய்க்கு தனக்கென ஒரு ‘வீடு’ வாங்கிய ஒருவரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இங்கிலாந்தின் டெர்பிஷையரில் வசிக்கும் நபர்தான் இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் ரூ. 105 செலவில் வீட்டை வாங்கி, தனது மனைவியுடன் வசித்து வருகிறார். பாப் காம்ப்பெல் என்ற அந்த நபர், மனைவி கரோல் ஆன் உடன் எளிமையான வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டை கட்டுவதற்கு ரூ. 105 மட்டுமே செலவு ஆனது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? சில ஆண்டுகளுக்கு முன்பாக ரூ. 105 செலவில் டாப் காம்ப்பெல் ஒரு பெரிய ட்ரம்மை வாங்கியுள்ளார். பின்னாளில் அதனை வீடாக மாற்றலாம் என்ற ஐடியா அவருக்கு ஏற்பட்டுள்ளது.
சிறிது சிறிதாக அந்த பெரிய ட்ரம்முக்குள் கட்டில், மெத்தை, கிட்சென் உள்ளிட்டவற்றை காம்ப்பெல் அமைக்கத் தொடங்கினார். அந்த ட்ரம் வீட்டிற்குள் மாடி படுக்கை கூட அவர் அமைத்திருக்கிறார். முதலில் இந்த வீட்டை காம்ப்பெல்லின் மனைவி கரோலுக்கு பிடிக்கவில்லையாம். ஆனால், எளிமையான வீடு பின்னாளில் அவரை ஈர்த்துள்ளது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக அந்த வீட்டில் வசித்து வருகின்றனர். அத்துடன், வீட்டை சுற்றிலும் மரங்கள் அமைத்தும் குளம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த ட்ரம் வீடு குறித்த தகவல்கள் உலகம் முழுவதும் கவனம்பெற்று வருகிறது.