கடவுள் நமக்கு வருமானமாக கையில் பணத்தை கொடுப்பது எதற்காக தெரியுமா..? நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக. கையில் இருக்கும் பணமும் செலவாகக் கூடாது. ஆனால், தேவைகளும் பூர்த்தியாக வேண்டும் என்றால், அது எப்படி நடக்கும். ஆகவே, தேவைகளுக்காக பணத்தை செலவு செய்யும்போது, வருத்தத்தோடு அந்த பணத்தை செலவு செய்யக்கூடாது. வாடகை வீட்டில் இருப்பவர்கள், வாடகை கொடுத்தால் தான் அந்த வீட்டில் குடியிருக்க முடியும். தினமும் பசி இல்லாமல் வாழ வேண்டும் என்றால், அதற்கான உணவுப் பொருட்களை பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும். ஆகவே, பணத்தை செலவு செய்து உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும்போது, கவலையோடு இருக்கக் கூடாது. ஐயோ கையில் இருந்து பணம் கரைகிறதே என்று நினைக்கக்கூடாது.
நம்முடைய தேவை பூர்த்தி ஆகிறது என்று சந்தோஷப்பட வேண்டும். சரி என்னதான் சொன்னாலும் செலவாகும்போது கொஞ்சம் மனசு வருத்தப்படத்தான் செய்யும். செலவு செய்த பணம் மீண்டும் நம் கைக்கே வருமானமாக திரும்பி வர வேண்டும் என்றால் என்ன செய்வது. ஆன்மீகத்தில் இதற்கும் ஒரு வழி இருக்கிறது. என்ன செலவு செய்தாலும் சரி, செலவுக்கான பணத்தை கையில் எடுத்துக்கொண்டு, அந்த பணத்தை செலவு செய்வதற்கு முன்பாக இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லிப் பாருங்க. பணம் செலவு செய்யும்போது சொல்ல வேண்டிய மந்திரம் ஓம் ஸ்ரீம் யம் நமஹ ஒரே ஒரு வரி மந்திரம் தான்.
இதை நீங்கள் சுலபமாக மனப்பாடம் செய்து வைக்கலாம். வாங்கிய பொருட்களுக்கெல்லாம் கடையில் பில் போட்டாச்சு. பணத்தை எடுத்து நீங்க இப்ப கொடுக்கணும். பணத்தை கையில் எடுத்து வைத்திருப்பீர்கள். அப்படியே மனதிற்குள் அந்த மகாலட்சுமியை மன கண் முன்னாடி கொண்டு வந்து, ‘ஓம் ஸ்ரீம் யம் நமஹ’ என்ற இந்த மந்திரத்தை எத்தனை முறை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லி விடுங்கள். கையில் இருக்கும் பணத்தை கடைக்காரருக்கு கொடுக்கக்கூடிய அந்த இடைபட்ட நேரத்தில் இந்த மந்திரத்தை சொல்லி பணத்தை கொடுக்க வேண்டும்.
சந்தோஷமாக அந்த பணத்தை செலவு செய்யுங்கள். கூடவே இந்த மந்திரம் சொல்லும் போது நீங்கள் செலவு செய்த பணம் நிச்சயம் உங்களுக்கு வருமானமாக திரும்ப கிடைக்கும். பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்தில் ஃபீஸ் கட்டும் போதும் இதை சொல்லலாம். ஏதாவது ஒரு தொழிலில் பணத்தை முதலீடு செய்யும் போதும் இந்த மந்திரத்தை சொல்லலாம். நிச்சயம் பல மடங்கு உங்களுக்கு லாபம் கிடைக்கும். இப்போதுதான் யாரும் கையில் படத்தை எடுத்து செல்வது கிடையாதே.
டிஜிட்டல் இந்தியாவாக மாறிவிட்டது. Gpay செய்கின்றோம். அப்போது என்ன செய்வது. கவலை வேண்டாம். Gpay செய்வதாக இருந்தாலும் அந்த பணத்தை Gpay செய்யும் போது, மனதிற்குள் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். உங்களுக்கும் நல்லதே நடக்கும். சந்தோஷமாக பணத்தை செலவு செய்பவர்களுக்கு சந்தோஷமான வருமானம் வந்து கொண்டே இருக்கும். அதில், மாற்றுக்கருத்தே இல்லை.
Read More : Central Bank of India வங்கியில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?