fbpx

’இதை மட்டும் பண்ணுங்க’..!! ’எல்லாம் நான் பாத்துக்குறேன்’..!! பெண்கள் முன் கதறி அழுத வடகொரிய அதிபர்..!!

வெளிநாட்டு சினிமாக்களுக்கு தடை, தொலைக்காட்சிகளுக்கு தடை என சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது வடகொரியாவில். விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை விதிக்கப்படும். இந்த நாட்டின் அதிபராக கிம்ஜாங் உன் பதவியில் உள்ளார். இந்நிலையில்தான் நாட்டில் உள்ள பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக் கூறி மேடையில் கிம்ஜாங் உன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். வடகொரியாவில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வரும் நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதாவது தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சியில் அதிபர் கிம்ஜாங் உன் பேசுகையில், ”நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். அதுதான் நம் நாட்டை பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பது மட்டுமின்றி குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்” என பேசினார்.

இப்படி பேசுகையில் கிம்ஜாங் உன் கண்கலங்கினார். இதையடுத்து அவர் தனது கையில் இருந்த வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து கண்ணீரை துடைத்து கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தற்போதைய சூழலில் ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி நடப்பு ஆண்டில் வடகொரியா பெண்களிடம் குழந்தை பிறப்பு சராசரி என்பது 1.8 என்ற அளவில் உள்ளது. இது வடகொரியாவின் அண்டை நாடுகளை விட அதிகம்தான். இருப்பினும் பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என கிம்ஜாங் உன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

சென்னை வெள்ளம்!… சேதமடைந்த ஃப்ரிட்ஜ், டிவி, நகைகள் மற்றும் பிற உபகரணங்கள் வீட்டுக் காப்பீட்டின் கீழ் வருமா?

Thu Dec 7 , 2023
கோரதாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த பெருமழை வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த ஃப்ரிட்ஜ், டிவி, நகைகள் மற்றும் பிற உபகரணங்கள் வீட்டுக் காப்பீட்டின் கீழ் வருமா என்பது குறித்து Policybazaar.com பொதுக் காப்பீட்டுத் துறையின் தலைமை வணிக அதிகாரி தருண் மாத்தூர் பதிலளித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரழிவுகள் பெருகிய முறையில் அழிவை ஏற்படுத்தி வருகின்றன. சூறாவளிகள், பூகம்பங்கள் மற்றும் வெள்ளம் போன்ற நிகழ்வுகள், பல […]

You May Like