fbpx

நீங்கள் கடன் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டுமா..? அமாவாசை அன்று இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க..!!

நம் அனைவருமே எதிர்பாராத சூழ்நிலையால் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். வாழ்க்கையில் முறையான திட்டமிடல் இல்லையென்றால் கடனாளியாக மாறிவிடுவோம். ஒரு சிலர் சரியான திட்டமிடல் செய்திருந்தாலும் சில சமயத்தில், கடன் வாங்கி ஒரு செயலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். வாங்கிய கடனை உரிய நேரத்தில் அடைத்து நிம்மதியான வாழ்க்கை வாழ கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை அமாவாசை தினத்தன்று செய்து வர வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள் :

மண் அகல் பெரியது ஒன்று

மண் அகல் சிறியது ஒன்று

பஞ்சு திரி

நெய்

கல் உப்பு

என்ன செய்ய வேண்டும்..?

* இந்த விளக்கை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஏற்றி வழிபட்டாலும் சரி, உங்கள் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டாலும் சரி உரிய பலன் கிடைக்கும்.

* அமாவாசை நாளில் தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறை அல்லது குலதெய்வ கோயிலுக்கு சென்று ஒரு பெரிய மண் அகல் விளக்கு வைத்து, அதில் கல் உப்பு நிரப்பி அதன் மேல் ஒரு சிறிய மண் அகல் வைக்க வேண்டும்.

* பிறகு அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, இரட்டை பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

* பிறகு வாங்கிய கடன் அடைந்து போக வேண்டும். கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கடவுளிடம் மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு வரக் கூடிய ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று செய்து வந்தால் மொத்த கடனும் அடைய வழி பிறக்கும்.

Read More : உங்கள் கால் விரல்களை வைத்தே முழு ஜாதகத்தையும் சொல்லலாம்..!! எப்படி தெரியுமா..? இதை தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

To pay off the loan on time and live a peaceful life, the remedy given below should be done on the new moon day.

Chella

Next Post

பெண்களுக்கு எந்த வயதில் 'செக்ஸ்’ மீதான ஆசை அதிகரிக்கும்..? ஆய்வு முடிவில் வெளியான தகவல்..!!

Thu Nov 7 , 2024
Only 30 percent of 23- to 35-year-old women want lust or feel the need to experience deep love.

You May Like