டின்பிஎஸ்சி குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, ஜூலை 12ஆம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இன்று முதல் அடுத்த மாதம் 24ஆம் தேதி வரை இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த குரூப் 4 தேர்வு மூலம் 3,935 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு ஆகும்.
Read More : போருக்கு தயாராகும் இந்தியா..? அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்..!! பாகிஸ்தான் ஒன்னுமே இல்ல..!!