fbpx

இந்த 5 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும்..!! கல்லீரலை ஈசியாக சுத்தம் செய்யலாம்..!!

நமது உடலில் முக்கிய உள்ளுறுப்பான கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இதற்காக சில ஆரோக்கிய பானங்களை எடுத்து வருவது நல்லது. கெட்டுப்போன கல்லீரலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர மூலிகை சாறு பெரிதும் உதவுகிறது. இதை எவ்வாறு தயாரிக்கலாம் என்று விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் பொருட்கள் :

இஞ்சி

எலுமிச்சை சாறு

கேரட்

பீட்ரூட்

தேன் மூலிகை சாறு

தயாரிக்கும் முறை :

* ஒரு முழு கேரட்டை தோல் நீக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் ஒரு பீட்ரூட்டை பாதியாக நறுக்கி அதன் தோலை நீக்கி விட வேண்டும். இவை இரண்டையும் ஒரு கிண்ணத்தில் போட்டு கழுவி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

* பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் விதைகளை நீக்கி சாற்றை மட்டும் ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

* பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதற்குள் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட், கேரட் சேர்க்க வேண்டும்.

* பிறகு இஞ்சி துண்டுகளை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

* அரைத்த சாற்றை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி அதில் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்காக தேன் சேர்த்து குடிக்கவும்.

* காலையில் உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இந்த சாற்றை அருந்த வேண்டும்.

* தொடர்ந்து ஒரு மாதம் இதை குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறி அதன் ஆரோக்கியம் மேம்படும்.

Read More : ”திருமணத்திற்கு முன்பு ஒத்திகை பார்க்கலாம் வா”..!! இளம்பெண்ணை ரூமுக்கு அழைத்து வந்து பாலியல் தொல்லை..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

English Summary

It is very important to keep the liver, an important organ in our body, healthy.

Chella

Next Post

கஜகஸ்தானில் விபத்துக்குள்ளான அஜர்பைஜான் விமானம் : இதுவரை 42 பேர் பலி..!!

Wed Dec 25 , 2024
Azerbaijan Airlines plane crashes in Kazakhstan; over 30 dead, 28 survivors hospitalised

You May Like