சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023” விளக்க குறிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அந்த குறிப்பில், சென்னை புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்க தமிழ்நாடு சுற்றுலாத்துறை முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீம் பார்க்கை அமெரிக்காவில் உள்ள டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்று சர்வதேச அளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தீம் பார்க் திட்டம் தனியார் பங்களிப்புடன் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தீம் பார்க்கில் விளையாட்டு அரங்குகள், நீர் விளையாட்டுகள், ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும் வகையில் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.