தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் விபத்திற்குள்ளாகி மரணிக்காமல் தப்பித்த நபர்களின் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
தேனீக்களை போல சுறுசுறுப்புடன் இயங்கும் சமூக வலைதளங்களை நாம் அன்றாடம் தவறாது பயன்படுத்தி வருகிறோம். அதில், இருக்கும் பல விஷயங்கள் நம்மை வியக்கவைக்கும். பொதுவாக லாரி ஓட்டுனர்கள் என்றாலே ஏளனமாக பார்க்கும் காலங்கள் மலையேறி, அவர்களை மதிக்கும் சூழல் தொடங்கிவிட்டன. அதற்கு முழு காரணமாக சமூக வலைதளங்கள் இருக்கின்றன. ஓட்டுனர்களின் கஷ்டத்தையும், துயரத்தையும் அவை விளக்க பெரிதும் பயன்பட்டன. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக விபத்துகள் மற்றும் அது தவிர்க்கப்படும் காணொளிகளை நாம் காண்கிறோம். அந்த வகையில், தேசிய நெடுஞ்சாலையில் லாரியில் விபத்திற்குள்ளாகி மரணிக்காமல் தப்பித்த நபர்களின் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி எடுக்கப்பட்டதாக அதன் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில், தேசிய நெடுஞ்சாலையை கடக்க இருவர் இருசக்கர வாகனத்தில் முயற்சிக்கின்றனர். அப்போது, லாரி ஓட்டுநர் அவர்களின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை பிரேக் அடித்து நிறுத்த முயற்சிக்கிறார். இருசக்கர வாகன ஓட்டிகளின் மீது முழு தவறு என்பது இருந்தாலும், அவர்களின் உயிரை மதித்து தனது புத்திசாலித்தனத்தால், விபத்தை ஏற்படுத்தாமல் தப்பிக்கிறார். இந்த வீடியோ அவ்வாகனத்திற்கு பின்னால் வந்த மற்றொரு வாகனத்தின் கேமராவில் பதிவாகியுள்ளது.