கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராகவும் பதவி வகித்து வரும் ராஜேஷ் குமார், கடந்த 2014ஆம் ஆண்டில் புறம்போக்கு நிலங்களை மீட்க சென்ற அரசு அதிகாரிகள் தாக்கியதாக அவர் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து, எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் உள்பட 3 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கில் தான், மூவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அபராதத் தொகையாக ரூ.100 செலுத்த வேண்டுமென்றும் நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹசன் முகமது உத்தரவிட்டுள்ளார்.